Top 3 Apps Similar to Tamil Calendar 2023

Nila Tamil Calendar 80
நிலா தமிழ் காலெண்டர் (நாள்காட்டி) 2024 - 2025 உங்கள்ஆன்ட்ராய்டுமொபைலில்
நபிவழி (The Prophet's Way) 1.9.7
Lectures, articles, sermons, Q&As on various Islamic topicsinTamil language
புலுகுல் அல்-மராம் தொகுப்பு (Bulugh-Al-Maram) 1.0.2
பத்ஹுல் பாரி: மாபெரும் இஸ்லாமிய கலைக் களஞ்சியம் இமாம் இப்னுஹஜர்அல்அஸ்கலானி (ரஹ்) (கி.பி 1372-1448) அவர்கள்அல்குர்ஆனுக்குஅடுத்தபடியாக நம்பகத்தன்மையில் கூடிய ஹதீஸ்கிரந்தமான"ஸஹீஹுல்புகாரி" கிரந்தத்துக்கு வழங்கிய தன்னிகரற்ற விரிவிரைநூலே"பத்ஹுல்பாரி" யாகும். இதன் முக்கியத்துவத்தை இமாம் ஷௌகானி(ரஹ்)அவர்களிடம்"நீங்கள் ஸஹீலுல் புஹாரிக்கு ஒரு விரிவுரை எழுதக்கூடாதா"?எனக்கேட்கப்பட்ட போது "பத்ஹுல் பாரி எழுதப்பட்டதன்பின்மீண்டுமொருவிரிவுரை எழுத வேண்டிய அவசியமில்லை" என இமாம்அவர்கள்அளித்த பதில்பத்ஹுல் பாரி யின் முக்கியத்துவத்துக்குசாண்றாகவும்அறிஞர்பெருமக்கள் மத்தில் பத்ஹுல் பாரிபெற்றிருந்தநன்மதிப்பையும்விளக்குகிறது. இமாம் இப்னு ஹஜர் (ரஹ்)அவர்கள் முப்பதுஆண்டுகாலமாகஎழுதிய இவ்விரிவுரை நூலில் தனது ஒட்டுமொத்தஅறிவையும்பதிவுசெய்துள்ளார்கள் என்றால் மிகையாகாது. இமாம் இப்னுஹஜர்(ரஹ்)அவர்கள் ஹிஜ்ரி 813ம் ஆண்டு தனது விரிவுரையின்முன்னுரையான"அல்ஹத்யுஸ் ஸாரி" யை எழுத ஆரம்பித்தார்கள். பின்புபத்ஹுல் பாரியை817ம்ஆண்டு ஆரம்பித்து 842ம் ஆண்டு எழுதிமுடித்தார்கள். எழுதிமுடித்தைகொண்டாட வேண்டி மிகப் பெரும் விழா ஒன்றுஏற்பாடுசெய்யப்பட்டது.அறிஞர்பெருமக்கள், ஆட்சியாளர்கள் மற்றும்பிரமுகர்கள்பலரும் அதில் கலந்துகொண்டனர். கவிஞர்கள் இமாம்அவர்களின்தன்னிகரில்லாப் பணியையும் நூலின்அருமை பெருமைகளையும் பாடிஇயற்றப்பட்டகவிதைகளை பத்ஹுல் பாரியின்பதின் மூண்றாம் பாகத்தில்எம்மால் காணக்கூடியதாக உள்ளது. ஸஹீஹுல்புகாரிக்கு ஏற்கனவேஎழுதப்பட்டிருந்தவிரிவுரை நூற்களை நுணுக்கமாகவாசித்து அதன்கருத்துக்களை துல்லியமாகபகுப்பாய்வுக்கு உட்படுத்திஅக்கருத்துக்களின்சரி பிழைகளை இமாம்அவர்கள் பத்ஹுல் பாரியில் பக்கசார்பின்றிவிமர்சனத்துக்குஉட்படுத்தியுள்ளது பத்ஹுல் பாரியின்சிறப்புகளுக்குமகுடம் வைத்ததுபோல் அமைந்துள்ளது. இமாம் புஹாரி (ரஹ்)அவர்கள் ஸஹீஹுல்புஹாரியைதொகுத்ததன் நோக்கம், அவ்வாறு தொகுக்கும்போது கடைப்பிடித்தஒழுங்குமுறைகள் மற்றும் நிபந்தனைகள், இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள்ஸஹீஹுல்புஹாரியில் இட்டுள்ளபாடத்தலைப்புகள்,அத்தலைப்புகளுக்குக்குப்பின்னால் மறைந்துள்ள இமாம்புஹாரி (ரஹ்)அவர்களது அறிவுக் கூர்மைமற்றும் சுயேட்சையான ஆய்வு முறைஎன சகலதையும்பத்ஹுல் பாரியில் இமாம்இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள்அழகாகபடம்பிடித்துள்ளார்கள்.ஆதாரங்கள்அடிப்படையில்விவரித்துள்ளார்கள்.அதே போன்று இமாம் புஹாரி (ரஹ்)அவர்கள் ஒரு ஹதீஸைசட்ட விளக்கம் என்றகாரனத்தைக் கவனத்திற் கொன்டுஎவ்வாறு வெவ்வேறுதலைப்புகளில் துண்டுதுண்டாக பதிவு செய்துள்ளார்கள்.ஒரே ஹதீஸை எவ்வாறுசம்பந்தப்பட்டதலைப்புகளில் வெவ்வேறு அறிவிப்பாளர்வரிசைகளுடன்பதிவுசெய்துள்ளார்கள், இது தொடர்பில் இமாம் புஹாரி(ரஹ்)அவர்கள்கடைப்பிடித்துள்ள நுணுக்கமான முறைமைகள் என்பதுதொடர்பிலும்ஆழமானவிளக்கங்களை இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பத்ஹுல்பாரிநெடுகிலும்ஆங்காங்கே விளக்கியுள்ளார்கள். குறிப்பாக ஒரு ஹதீஸின்பல்வேறுபட்டவடிவங்கள் என்ன, அவைகளில் இடம் பெறும்வசனங்கள்மற்றும்சொற்பிரயோகங்கள் யாவை அவைகளுக்கா மொழியியல்விளக்கங்கள்என்ன,அவைகளில் எதை எதற்காக எடுக்க்க வேண்டும் எதைத்தவிர்க்கவேண்டும்என்பது போன்ற ஆய்வியல் வழிமுறைகளையும்அழகுறதெளிவுபடுத்தியுள்ளார்கள். இதற்கும் அப்பால், ஒருஹதீஸைஎப்படிஏற்றுக் கொள்ளத்தக்கதா மறுக்கத்தக்கதா என்பதை தரம்பிரித்துஅறிந்துகொள்வது ஹதீஸ்களுக்கிடையில் அறிவிப்பாளர்வரிசைகளிலும்மூலவாக்கியங்களிலும் காணப்படும் முரண்பாடுகளை எவ்வாறுகளைந்துஹதீஸ்களைசரியான வடிவில் புரிந்து கொள்வதுஎன்பதையும்ஆழமாகஎடுத்தெழுதியுள்ளார்கள். ஒரு ஆய்வாளனுக்கு அவசியமானஹதீஸ்கலைகள்,சட்டக் கலைகள், அல்குர் ஆன் விளக்க முறைகள் போன்றஇன்னோரன்னதுறைகளில்உள்ள கோட்பாட்டு விளக்கங்களையும் நடைமுறைஉதாரனங்களையும்இமாம்அவர்கள் அள்ள அள்ளக் குறையாத அளவிற்கு அதிகளவில்நூல்முழுவதும்அள்ளித் தெளித்துள்ளார்கள் என்பதையும் நாம்காண்கின்றோம்.ஆகமொத்தத்தில், பத்ஹுல் பாரி ஒவ்வொரு இஸ்லாமியமாணவரும்ஆய்வாளரும்படித்துப் பயன் பெற வேண்டிய "மாபெரும் இஸ்லாமியகலைக்களஞ்சியம்"என்பதில் சந்தேகமில்லை.