hourglass_full Your download should start automatically in a few seconds...

Download புலுகுல் அல்-மராம் தொகுப்பு (Bulugh-Al-Maram)_Latest Version.apk from Apk-Dl Server

Thank you for using Apk-Dl.com to download the apk file (புலுகுல் அல்-மராம் தொகுப்பு (Bulugh-Al-Maram)_Latest Version.apk),

If the download doesn't start automatically in a few seconds, please click here to access the download URL directly.

Note: Download and save the apk file to your Android Phone's SD card and install it manually onto the Android device.

Description

பத்ஹுல் பாரி: மாபெரும் இஸ்லாமிய கலைக் களஞ்சியம் இமாம் இப்னு ஹஜர்அல்அஸ்கலானி (ரஹ்) (கி.பி 1372-1448) அவர்கள் அல்குர்ஆனுக்குஅடுத்தபடியாக நம்பகத்தன்மையில் கூடிய ஹதீஸ் கிரந்தமான"ஸஹீஹுல்புகாரி" கிரந்தத்துக்கு வழங்கிய தன்னிகரற்ற விரிவிரை நூலே"பத்ஹுல்பாரி" யாகும். இதன் முக்கியத்துவத்தை இமாம் ஷௌகானி (ரஹ்)அவர்களிடம்"நீங்கள் ஸஹீலுல் புஹாரிக்கு ஒரு விரிவுரை எழுதக் கூடாதா"?எனக்கேட்கப்பட்ட போது "பத்ஹுல் பாரி எழுதப்பட்டதன் பின்மீண்டுமொருவிரிவுரை எழுத வேண்டிய அவசியமில்லை" என இமாம் அவர்கள்அளித்த பதில்பத்ஹுல் பாரி யின் முக்கியத்துவத்துக்கு சாண்றாகவும்அறிஞர்பெருமக்கள் மத்தில் பத்ஹுல் பாரி பெற்றிருந்தநன்மதிப்பையும்விளக்குகிறது. இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் முப்பதுஆண்டுகாலமாகஎழுதிய இவ்விரிவுரை நூலில் தனது ஒட்டு மொத்தஅறிவையும்பதிவுசெய்துள்ளார்கள் என்றால் மிகையாகாது. இமாம் இப்னு ஹஜர்(ரஹ்)அவர்கள் ஹிஜ்ரி 813ம் ஆண்டு தனது விரிவுரையின் முன்னுரையான"அல்ஹத்யுஸ் ஸாரி" யை எழுத ஆரம்பித்தார்கள். பின்பு பத்ஹுல் பாரியை817ம்ஆண்டு ஆரம்பித்து 842ம் ஆண்டு எழுதி முடித்தார்கள். எழுதிமுடித்தைகொண்டாட வேண்டி மிகப் பெரும் விழா ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டது.அறிஞர்பெருமக்கள், ஆட்சியாளர்கள் மற்றும் பிரமுகர்கள்பலரும் அதில் கலந்துகொண்டனர். கவிஞர்கள் இமாம் அவர்களின்தன்னிகரில்லாப் பணியையும் நூலின்அருமை பெருமைகளையும் பாடி இயற்றப்பட்டகவிதைகளை பத்ஹுல் பாரியின்பதின் மூண்றாம் பாகத்தில் எம்மால் காணக்கூடியதாக உள்ளது. ஸஹீஹுல்புகாரிக்கு ஏற்கனவே எழுதப்பட்டிருந்தவிரிவுரை நூற்களை நுணுக்கமாகவாசித்து அதன் கருத்துக்களை துல்லியமாகபகுப்பாய்வுக்கு உட்படுத்திஅக்கருத்துக்களின் சரி பிழைகளை இமாம்அவர்கள் பத்ஹுல் பாரியில் பக்கசார்பின்றி விமர்சனத்துக்குஉட்படுத்தியுள்ளது பத்ஹுல் பாரியின்சிறப்புகளுக்கு மகுடம் வைத்ததுபோல் அமைந்துள்ளது. இமாம் புஹாரி (ரஹ்)அவர்கள் ஸஹீஹுல் புஹாரியைதொகுத்ததன் நோக்கம், அவ்வாறு தொகுக்கும்போது கடைப்பிடித்த ஒழுங்குமுறைகள் மற்றும் நிபந்தனைகள், இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள் ஸஹீஹுல்புஹாரியில் இட்டுள்ள பாடத்தலைப்புகள்,அத்தலைப்புகளுக்குக்குப்பின்னால் மறைந்துள்ள இமாம் புஹாரி (ரஹ்)அவர்களது அறிவுக் கூர்மைமற்றும் சுயேட்சையான ஆய்வு முறை என சகலதையும்பத்ஹுல் பாரியில் இமாம்இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் அழகாகபடம்பிடித்துள்ளார்கள்.ஆதாரங்கள்அடிப்படையில் விவரித்துள்ளார்கள்.அதே போன்று இமாம் புஹாரி (ரஹ்)அவர்கள் ஒரு ஹதீஸை சட்ட விளக்கம் என்றகாரனத்தைக் கவனத்திற் கொன்டுஎவ்வாறு வெவ்வேறு தலைப்புகளில் துண்டுதுண்டாக பதிவு செய்துள்ளார்கள்.ஒரே ஹதீஸை எவ்வாறு சம்பந்தப்பட்டதலைப்புகளில் வெவ்வேறு அறிவிப்பாளர்வரிசைகளுடன் பதிவுசெய்துள்ளார்கள், இது தொடர்பில் இமாம் புஹாரி (ரஹ்)அவர்கள்கடைப்பிடித்துள்ள நுணுக்கமான முறைமைகள் என்பது தொடர்பிலும்ஆழமானவிளக்கங்களை இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பத்ஹுல் பாரிநெடுகிலும்ஆங்காங்கே விளக்கியுள்ளார்கள். குறிப்பாக ஒரு ஹதீஸின் பல்வேறுபட்டவடிவங்கள் என்ன, அவைகளில் இடம் பெறும் வசனங்கள்மற்றும்சொற்பிரயோகங்கள் யாவை அவைகளுக்கா மொழியியல் விளக்கங்கள்என்ன,அவைகளில் எதை எதற்காக எடுக்க்க வேண்டும் எதைத் தவிர்க்கவேண்டும்என்பது போன்ற ஆய்வியல் வழி முறைகளையும்அழகுறதெளிவுபடுத்தியுள்ளார்கள். இதற்கும் அப்பால், ஒரு ஹதீஸைஎப்படிஏற்றுக் கொள்ளத்தக்கதா மறுக்கத்தக்கதா என்பதை தரம் பிரித்துஅறிந்துகொள்வது ஹதீஸ்களுக்கிடையில் அறிவிப்பாளர் வரிசைகளிலும்மூலவாக்கியங்களிலும் காணப்படும் முரண்பாடுகளை எவ்வாறு களைந்துஹதீஸ்களைசரியான வடிவில் புரிந்து கொள்வது என்பதையும்ஆழமாகஎடுத்தெழுதியுள்ளார்கள். ஒரு ஆய்வாளனுக்கு அவசியமான ஹதீஸ்கலைகள்,சட்டக் கலைகள், அல்குர் ஆன் விளக்க முறைகள் போன்ற இன்னோரன்னதுறைகளில்உள்ள கோட்பாட்டு விளக்கங்களையும் நடைமுறை உதாரனங்களையும்இமாம்அவர்கள் அள்ள அள்ளக் குறையாத அளவிற்கு அதிகளவில் நூல்முழுவதும்அள்ளித் தெளித்துள்ளார்கள் என்பதையும் நாம் காண்கின்றோம்.ஆகமொத்தத்தில், பத்ஹுல் பாரி ஒவ்வொரு இஸ்லாமிய மாணவரும்ஆய்வாளரும்படித்துப் பயன் பெற வேண்டிய "மாபெரும் இஸ்லாமிய கலைக்களஞ்சியம்"என்பதில் சந்தேகமில்லை.